அமெரிக்காவில் சீன தூதரகம் மூடல்!!!!

அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருக்கும் சீன தூதரகத்தை மூடுமாறு அந்த நாட்டுக்கு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியை பீஜிங் உறுதிப்படுத்தியுள்ளது. இது அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. மேலும், கொரோனா தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், ஹாங்காங் மீது சீனா, தனது அதிகாரத்தை அதிகப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை திணித்து இருக்கும் நிலையில், அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.