‘இயேசு படங்களுக்கு பதிலாக, லெனின், மாவோ படங்கள்….’ அடங்காத சீனா !!!

சீனாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த நிலையில், கிறிஸ்தவர்களின் வீடுகளில் உள்ள இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் படங்களை வைக்கச் சொல்லி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
’டெய்லி மெயில்’ தளத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், அன்ஹுய் ஜியான்ங்சு, ஹேபேய் மற்றும் ஸீஜியாங் ஆகிய மாகாணங்களில் உள்ள அதிகாரிகள், தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மாகாணமான ஷாங்ஹியில், இயேசுவின் புகைப்படங்களை அகற்றிவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்கள், சீன அரசால், நாத்திக கொள்கைக்கு மாற நிர்பந்திக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.