லேசான அறிகுறியுடன் தப்பியவர்களை மீண்டும் துரத்தும் கொரோனா!

கொரோனா தொற்று உண்டாகி அதனால் லேசான அறிகுறிகளை அனுபவித்து குணமடைந்தவர்களுக்கு மூன்று மாதத்திற்கு பிறகு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
நியூ இங்கிலாந்து ஜர்னல் பார் மெடிசன் என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் லேசான அறிகுறிகள் ஏற்பட்டு மீண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகியிருக்கும். அந்த ஆன்டிபாடிகளை பரிசோதனைக்கு எடுத்தனர். அறிகுறி தொடங்கிய 37 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்ட ஆன்டிபாடிகளை ஆய்வு செய்ததில் அவை குறையவில்லை.
86 நாட்களுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்த போது ஆன்டிபாடி அளவுகள் விரைவாக வீழ்ச்சியடைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சார்ஸை நோயில் உண்டானதை விட கோவிட்-19-ல் ஆன்டிபாடிகளின் இழப்பு மிக விரைவாக நிகழ்ந்தது. பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறி ஏற்பட்டு மீண்டவர்கள் என்பதால் அவர்களை மீண்டும் கொரோனா தாக்கும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.