தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இன்ப செய்தி – செமஸ்டர் தேர்வுகள் ரத்து!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி நீடித்து வந்த நிலையில், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது. இதையடுத்து செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாகவும், யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல் படி மதிப்பெண் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கலை , அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு.
முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.
பி.இ., படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு, எம்.இ., மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.
எம்.சி.ஏ., முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு ஆகியவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.