‘நடிகர் ரஜினி சார், இது பற்றி வாய் திறக்க மாட்டீங்கா ?’ ஜோதிமணி எம்.பி. கிண்டல் ட்வீட்

மோடி அரசு, இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள துரோகத்தை பற்றி வாய் திறக்க மாட்டீர்களா என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்

ரஜினிகாந்த், அரசியலில் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், ஆக்டிவாக இருப்பதில்லை. சம்பவம் நடந்து முடிந்து சில பல நாட்களுக்கு பின்னரே கருத்து சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். சாத்தான்குள தந்தை மகன் கொலை சம்பவத்திலும், பத்து நாட்கள் கழித்தே கண்டனம் தெரிவித்தார். கந்தசஷ்டி விவகாரத்திலும், பத்து நாட்களுக்கு பின்னர் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ”திரு. ரஜினிகாந்த் அவர்களே தமிழகத்தில் பிற்படுத்தப்ப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்70% இந்திய அளவில் 52%. அவர்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது பிஜேபி அரசு.

அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா?அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x