வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன், வங்கி ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதுவரை 35 சுற்றுக்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்நிலையில், வங்கி ஊழியர் சங்கங்கள் மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x