ராமர் கோயில் பூமி பூஜைக்கு தடை கோரி மனு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பூமி பூஜைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சாகேத் கோகலே தாக்கல் செய்துள்ள இந்த பொதுநல மனுவில், “ கொரோனா நோய்த்தொற்று வேகமாக உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில, பூமி பூஜை நடத்துவது ஊடரங்கு வழிகாட்டுதல்களை மீறுவதாகும். பூமி பூஜை திட்டத்திற்கு சுமார் 300 பேர் கூடுவார்கள். எனவே, பொதுநலன் கருதி இதற்கு தடை விதிக்க வேண்டும்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x