சென்னையில் பிரம்மாண்டமான மருத்துவமனை!!! ZOHO நிறுவனம் முடிவு

சென்னையில் 2.6 லட்சம் சதுர அடி நிலத்தில் பிரம்மாண்டமான மருத்துவமனை ஒன்றை கட்ட சோகோ (ZOHO) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் இருக்கும் சோகோ (ZOHO) நிறுவனத்தின் செயலிகள், தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குகின்றன. சென்னைக்குள் நுழையும் போதே கருப்பு நிற கண்ணாடிகளால் பிரமாண்டமான முறையில் வித்தியாசமான அமைப்பில் சோகோ (ZOHO) நிறுவன கட்டிடம் நம் கண்ணில் தென்படும்.

இந்நிலையில், 2.6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பிரம்மாண்டமான மருத்துவமனையை சோஹோ நிறுவனம் அமைக்க உள்ளது. முழுக்க முழுக்க தனிமைப்படுத்தப்படும் வசதிகளை கொண்டு மொத்தமாக 250 பெட்கள் இருக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த மருத்துவமனையை அமைக்க உள்ளனர்.

இதற்காக முதற்கட்டமாக 70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 12-16 மாதங்களில் இந்த பணிகள் அனைத்தையும் முடித்து திறக்க உள்ளனர்.