என் இசையை தடுக்க பாலிவுட்டில் ஒரு கூட்டம் உள்ளது – பரபரப்பு கிளப்பிய ரஹ்மான்

ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மான் அளித்த பேட்டியில் எனக்கு பாலிவுட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை கெடுக்க ஒரு கூட்டம் திட்டம் போட்டு செயல்பட்டு வருவதை தற்போது தான் அறிந்துகொண்டேன் என கூறியுள்ளார்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சாரா படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக ரேடியோ நிகழ்ச்சி ஒன்றிற்கு ரஹ்மான் பேட்டியளித்தார். அதில், தில் பேச்சாரா ஹிந்தி திரைப்படத்தின் இயக்குனர் முகேஷ் சாப்பாரா என்னிடம் வந்த போது இரண்டு நாட்களில் நான்கு பாடல்கள் பதிவு செய்து கொடுத்தேன்.
அதற்கு அவர் உங்களிடம் போக வேண்டாம் என பாலிவுட்டில் பலர் கூறுகின்றனர். உங்களை பற்றி பல விஷயங்களை கூறுகின்றனர் என்றார். அப்போது தான் பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமும் இது போல் ஒரு கும்பல் அவர் வாய்ப்பை கெடுத்தது தான் என கூறப்பட்டும் வரும் நிலையில் ரஹ்மானின் இக்கருத்து அதனை வலுப்படுத்தும் வகையில் உள்ளது