சீமான் மீது பாலியல் புகார் கூறி வந்த விஜயலட்சுமி தற்கொலை முயற்சி!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கூறிக்கொண்டிருந்த நடிகை விஜயலட்சுமி தற்போது சீமான், ஹரி நாடார் ஆகியோர் மிரட்டுவதாக குற்றம்சாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி. சீமானும் இவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் பிரிந்தனர். தன்னை ஏமாற்றி விட்டதாக சீமான் மீது தொடர்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் விஜயலட்சுமி.

அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் சீமானுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி செய்திகளில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காவும்தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது அந்த எண்ணம் இல்லை. என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறி இழிவாக பேசினார். மேலும், என்னுடைய சாதி குறித்தும் பேசினார். சீமான் மீதும், ஹரி நாடார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x