15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தன்னை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக 15 வயது சிறுமி புகாரளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணமால் போனார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த போலீசார் அவரை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தன்னை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த தொந்தரவை தொடர்சியாக அனுபவித்து வருகிறேன் என கூறி திடுக்கிட வைத்தார்.
இதையடுத்து அதிமுகவிலிருந்து நாஞ்சில் முருகேசன் நீக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.