முதல்வரின் சொந்த ஊரிலே ஆழ்கடத்தல் அதிகரிப்பு! பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேசத்தில் ஆள்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரபிரதேச மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. இவர் ஆட்சியின் மீது காங்கிரசின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், “ உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.” எனக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “அரசின் மெத்தனமான போக்கே அதிகரிக்கும் ஆட்கடத்தல் சம்பவத்திற்கு காரணம். எனவே சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் நாள்தோறும் செய்தித் தாள்களைப் படிப்பதில்லையா எனக் கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி, “முதல்வரின் சொந்த ஊரில் தான் அதிக அளவிலான ஆட்கடத்தல் சம்பவங்கள் நிகழ்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x