ராமர் கோயில் பூமிபூஜையில், பிரதமர் கலந்து கொள்ள ஒவைஸி ஆட்சேபனை

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில பூமிபூஜை விழாவில் பிரதமராகக் கலந்து கொள்ளக் கூடாது, ஒரு தனிநபராக, தனிமனிதராக கலந்து கொள்ளலாம், என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைஸி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் இது தொடர்பாக கூறியதாவது:

மோடி பிரதமராகப் பதவியேற்ற போது நம் அரசியல் சாசனத்தின் அடிப்படையான மதச்சார்பின்மையைப் பாதுகாப்பேன் என்று பதவிப்பிரமாணத்தில் உறுதி மொழி ஏற்றார்.

எனவே அயோத்தி நிகழ்ச்சியில் பிரதமராக அவர் கலந்து கொள்வது அவர் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது.

மாறாக அவர் ஒரு தனி மனிதராகக் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மதச் சுதந்திரம் உண்டு.

நான் பிரதமரிடம் கேட்பது என்னவெனில் இந்திய அரசுக்கு மதம் உள்ளதா என்பதையே. ஆனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இதற்கு அழைக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

இவ்வாறு கூறினார் ஓவைசி.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x