இந்திய பொருளாதார வளர்ச்சி இப்போதைக்கு வாய்ப்பில்லை… கைவிரித்த வல்லுனர்கள்

கொரோனா ஊரடங்கு தொடரும் நிலையில், பொருளாதார மீட்சி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்படவில்லை என்று பொருளதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பற்றிய தங்கள் கணிப்பை, பல தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மாற்றி அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே, ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிகவும் குறைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிவித்துள்ளன.
“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் மத்திய அரசு இன்னும் எதார்த்தமான நடைமுறை நடவடிக்கைகளையே துவங்கவில்லை. முறையான திட்டங்களையும் அறிவிக்கவில்லை. இதனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, பொருளாதார மீட்சி சாத்தியமில்லை” என்று ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.