காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் போர் விமானங்களை வாங்கிய இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்த அதே வேளையில், மோடி (Modi Govt) அரசாங்கத்திடம் மூன்று முக்கிய கேள்விகளையும் கேட்டுள்ளார்.
ராகுல் கூறியது, “ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய இந்திய விமானப்படைக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் மத்திய அரசு எனது மூன்று கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
- முதல் கேள்வி: 526 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை எதற்காக ஆயிரத்து 670 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளீர்கள்?
- இரண்டாவது கேள்வி: 126 விமானங்களுக்கு பதிலாக ஏன் வெறும் 36 விமானங்கள் மட்டும் வாங்கப்பட்டுள்ளது
- மூன்றாவது கேள்வி: எச் ஏ எல் அமைப்பதற்கு பதிலாக வங்கி மோசடியில் ஈடுபட்ட அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பிலான இந்த காண்ட்ராக்ட் ஏன் கொடுத்தீர்கள்?
என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
2019 தேர்தலுக்கு முன்னர், ராகுல் காந்தி இதே கேள்விகளை மீண்டும் மீண்டும் கூறி, ரஃபேல் (Rafale) ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அப்பொழுது அவர் “சவுகிதர் சோர் ஹை” (நாட்டின் காவலன் ஒரு திருடன்) என்ற முழக்கத்தை சொல்லி கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
