தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறையுங்கள் – ஸ்டாலின் வலியுறுத்தல்

டில்லியைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வியாழனன்று பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைத்தார். இதனால் டில்லியில் ரூ.82-க்கு விற்பனைக்கு ஆன ஒரு லிட்டர் டீசல் விலை, 8 ரூபாய் 36 காசுகள் குறைந்தது. வாட் வரி குறைப்பின் மூலம் டில்லி மாநில அரசின் வருவாய் பல கோடிகள் குறையும். இருப்பினும் இம்முடிவால் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களின் செலவு குறையும்.
இந்த நிலையில் தமிழகத்திலும் டில்லியைப் போன்று எரிபொருட்கள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: