கொரோனா பீதியால் பணத்தை வாஷிங் மெஷினில் துவைத்த வினோதம்

தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவிவிடும் என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுகளை வாஷிங்மெஷினில் போட்டு துவைக்கப்போக அந்த முயற்சி மிகப்பெரிய நஷ்டத்தில் முடிந்தது. தன் குடும்பத்தில் நடக்கவிருந்த இறுதிச்சடங்கு ஒன்றிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்துபெற்ற 50 ஆயிரம் தென்கொரிய (இந்திய மதிப்பில் 3137) ரூபாய் நோட்டுகள் வீணாகிவிட்டன.
கொரோனா காரணமாக தென்கொரிய மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நாட்களைக் கழித்துவருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தொற்று வந்துவிடக்கூடாது என்ற கவலையில் பொருட்களின் மேற்பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து வருவதை பழக்கமாக வைத்துள்ளனர்.