வந்தாச்சு கொரோனாவுக்கு தடுப்பூசி… அக்டோபரில் மக்கள் பயன் பாட்டுக்கு வருகிறது!!!

கொரோனா என்னும் கொடிய நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்தியாவும் தடுப்பூசி கண்டு பிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா என்ற நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன என தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டதாகவும். அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டார்.

தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x