மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!!

உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துகொண்டே செல்கிறது உலக வல்லரசு முதல் வளரும் நாடு வரை இந்த கொரோனா நோய்க்கு மிரண்டு போய் உள்ளனர்.

இந்தியாவை பொறுத்த வரை மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாட்டில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மத்தியபிரதேச மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்ய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தனக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளதை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது “ட்விட்டர் “பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன்னை தனிமை படுத்தி கொண்டு உள்ளதாகவும் அமித்ஷா அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.