5 ஆண்டுகளுக்கு பிறகு இறந்தவரை உயிரோடு கண்டுபிடித்த கில்லாடி போலீஸ்! எப்படி தெரியுமா?

கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி காணாமல் போன ரிகார்டஸ் புய்சிஸ் என்பவர் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து போலீஸ் அவரை கண்டுபிடித்துள்ளது.

வேலை பார்த்த நிறுவனம், மீண்டும் திங்கட் கிழமை வேலைக்கு வராத நிலையில், பணத்தை திருடிவிட்டு அவர் ஓடி விட்டார் என புகார் அளித்திருந்தது.

பின்னர், அவரை தேடிய போலீசார், அவர் இறந்து போயிருக்கலாம் என நம்பி அந்த கேஸை மூடியுள்ளனர். (அங்கேயும் அப்படித்தான்  போல)..

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், இறந்தவரின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் ஒரு பேஸ்புக் கணக்கு புதிதாக தொடங்கப்பட்டதை மோப்பம் பிடித்த இங்கிலாந்து போலீசார், அவரை கடந்த மாதம் ஜூலை 1ம் தேதி கண்டுபிடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இறந்துவிட்டார் என்று நம்பப்பட்ட ஒருவரை பெட்ஃபார்ட்ஷைரின் தலைமை காவல் அதிகாரி ராப் ஹால் கொண்ட குழு கண்டுபிடித்து இருக்கிறது.

அவர் ஏன் தப்பிச் சென்றார், அவருக்கு என்ன பிரச்சனை, பாதுகாப்புடன் இருக்கிறாரா? என்பதை எல்லாம் விசாரித்து விட்டு இந்த தகவலை தற்போது காவல் துறை வெளியிட்டு இருக்கிறது.

சாட்டரிஸ் எனும் இடத்தில் இருந்த நைட் லேயர் லீக் கம்பெனியில் இருந்து அவர் திருடியது குறித்த விசாரணையை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x