தமிழகத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வேலையின்மை விகிதம், தேசிய சராசரி விகிதத்தை விட அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடரும் நிலையில், வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதற்கு கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதே முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் போக்குவரத்து தொடங்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய துறைகள் பழைய நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 43.3 சதவீதமாகவும், மே மாதத்தில் 33 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 13.1 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை பதிவாகியுள்ளது.

தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7 சதவீதமாக ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஜூலை மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.1 சதவீதமாக பதிவாகி உள்ளது. இந்த விகிதம், தொழில்கள் நிறைந்த மாநிலங்கள் ஆன மஹாராஷ்டிராவில் 4.4 சதவீதமாகவும், குஜராத்தில் 1.9 சதவீதமாகவும் ஆகவும் உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x