அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை… அடிக்கல் நாட்டினார் மோடி !

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழாவிற்காக இன்று காலை ஹெலிகாப்டரில் அயோத்தி வந்த பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனி மனித இடைவெளியுடன் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்வரவேற்புஅளித்தனர்.

அயோத்தி வந்த பிரதமர் மோடி, அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி,தொடர்ந்து பூஜைகளை செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள பாரிஜாதமலர்ச்செடியை நட்டு வைத்தார்.

இதனையடுத்து , பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது,40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான பிரதமர் மோடி செங்கல்லை அடிக்கல் நாட்டினார்.