பிரதமர் மஹிந்தவிற்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார் மோடி …

இதுவரை வெளியான பொதுத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மக்களின் வலுவான ஆதரவோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற தான் தயாராக இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அதில் குறிப்பிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x