கோயம்பேடு காய்கறி சந்தையை செப்., 28-ல் திறக்க அரசு முடிவு!

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட், மே, 5ல் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக, திருமழிசை, மாதவரம் ஆகிய இடங்களில் தற்காலிக கடைகள் திறக்கப்பட்டன. தற்போது சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட், செப்., 28ம் தேதி திறக்கப்படும் என பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும், உணவு தானிய விற்பனை அங்காடி, செப்., 18ம் தேதி முதல்கட்டமாக திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தைக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.