அமைச்சருக்கு கத்தியோடு பகிரங்க மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள்!

கையில் கத்தியோடு பள்ளி மாணவர்கள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியான ஒரு வீடியோ தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுரையில் அண்மையில் நடந்த விழா ஒன்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது ஒரு சமூகத்தினர் குறித்து பேசிய வார்த்தை சர்ச்சையானது. இதையடுத்து அந்த சமுகத்தினரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தங்கள் ஜாதி பெயரை அசிங்கப்படுத்தியதாக எழுந்த பிரச்னையடுத்து இதற்கு எதிர்ப்பை காட்டுகின்றேன் என்று பெயரில் 14 வயதைகூட தாண்டாத மாணவர்கள் வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவில் 3 சிறுவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுவன் கையில் கத்தியை வைத்துக் கொண்டு, ஆட்டியபடியே இருக்கிறான். மற்றொருவன் அமைச்சர் செல்லூர் ராஜுவை பெயர் சொல்லியே மிரட்டுகிறான். தனது ஜாதியை பற்றி செல்லூர் ராஜு கேலி செய்து பேசியதாக அந்த சிறுவன் குற்றம்சாட்டுகிறான். இப்படி பேசக்கூடாது.. திமுகவை பற்றி பேசுங்கள், அதிமுகவை பற்றி பேசிக்கொள்ளுங்கள். எங்கள் ஜாதி பற்றி பேசக்கூடாது என அமைச்சரையே ஒருமையில் விளித்து, எச்சரிக்கிறான் அந்த சிறுவன்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில்தான் எனது சொந்த ஊர் முடிந்தை பார்த்துக்கொள் என்றும் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவருமே பள்ளி மாணவர்கள் என்று தெரிகிறது. சிறுவர்கள் மத்தியிலும், ஜாதி வெறி எந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டு செல்கிறது அப்பட்டமாக காட்டுகிறது இந்த வீடியோ.