பெண் உதவியாளுருடன் நெருக்கம் காட்டிய அதிகாரி: ஜூம் கேமராவால் சிக்கினார்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசு அதிகாரி ஒருவர் ஜூம் செயலி வழியிலான இணைய கூட்டத்திற்கு பின்பு, கேமராவை ஆஃப் செய்ய தெரியாமல் விட்டுவிட்டு, பின்னர் தன் செயலருடன் நெருக்கமாக இருந்து சிக்கியுள்ளார்.
பிலிபைன்ஸ் நாட்டின் கேவைட் நகருக்கு அருகே உள்ள கிராமத்தின் அதிகாரியாக இருப்பவர் ஜீசஸ் எஸ்டில். கொரோனா பரவல் காரணமாக அங்கும் ஜூம் செயலி மூலம் இணைய வழியில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி சமீபத்தில் அதிகாரி ஜீசஸ் எஸ்டில் கிராம சபை கூட்டத்தை கூட்டினார். இதில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின்பு ஜூம் செயலியின் கேமராவை ஆஃப் செய்துவிட்டதாக நினைத்து, அங்கு வந்த அவரது பெண் செயலாளருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை கண்ட மற்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை பிடிக்காத ஒருவர் இதனை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பிவிட இவ்விஷயம் வைரலானது. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அறிவித்துள்ளது. விசாரணையில் இது உண்மை என்று தெரிந்தால் அந்த அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்க வீடியோ கான்பிரன்ஸ்கள் பெரிதும் உதவுகின்றன. இதில் நிறைய முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து விடுகின்றன. கடந்த மே மாதம் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோவுடனான ஜூம் கான்பிரன்ஸ் கூட்டத்தின் போது ஒரு தொழிலதிபர் எதிர்பாராத விதமாக நிர்வாணமாக தோன்றினார்.