தொடர்ந்து கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி தற்போது ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார் என மருத்துவர்கள் கூறினர்.

பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10 ஆம் தேதி, மூளையில் இருந்த சிறிய கட்டியை அகற்ற டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாவும் உறுதியானது.

அதன்பிறகு, அவருக்கு நுரையீரல் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சிறப்பு மருத்துவர்கள் குழு, அவரது உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

சிறிது நாட்களுக்கு முன் அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். தற்போது உடல் இயக்கம் சீராக உள்ளது. ஆனால், அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார் என தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x