ராமருக்கு பூஜை ரூம்… ஆனால், தமிழ் கடவுள் முருகனின் வேலுக்கு சமையல் ரூமா?! சர்ச்சையான பா.ஜ.க. வேல் பூஜை

சில வாரங்களுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பல வகையில் பீ.ஜே.பீ கட்சி எதிர்ப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வேல் பூஜை செய்ய தமிழக பீ.ஜே.பீ கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், பீ.ஜே.பீ கட்சியின் அழைப்பை ஏற்று, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. காரணம், ஶ்ரீ விஷ்ணுவை பிரதான தெய்வமாக வணங்கும் வடகலை ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர்கள், முருகனை வழிபடுவதில்லை. இதனால், அந்த ஐயங்கார் சமூகத்தை சேர்ந்த மைத்ரேயன், பூஜை ரூமூக்குள் வைத்து முருகனுக்கு பூஜை செய்யாமல், தனது வீட்டு கிச்சனுக்குள் (சமையலறைக்குள்) முருகன் வேல் கம்பை வைத்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பேஸ்புக் எழுத்தாளர்கள், “ராமருக்கு பூஜை ரூம்; வேலன் வேலுக்கு சமையல் ரூமா??” என்று கிண்டலாக கேட்டுள்ளனர். “ஆன்மீகத்துக்காக கடவுளை வழிபட்டால் உண்மையான அன்பு வரும். அரசியலுக்காக பூஜை செய்தால், சமையலறைக்குள்தான் கடவுளுக்கு இடம் கிடைக்கும்” என்று பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.