“சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு வரும் மஞ்சள் பூசு, சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும்” – வடகொரிய அரசு எச்சரிக்கை..!

வெளி உலகிற்கு தகவல்கள் அதிகம் வெளியிடாத இருண்ட நாடு வடகொரியா. இந்நாட்டில் அரசுக்கு எதிராக எந்த ஊடகமும் கிடையாது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் ஒரே ஊடகம் ரோடாங் சின்முன்.

இந்த ஊடகம் தற்போது வடகொரிய குடிமக்கள் நலன் கருதி ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது. வடகொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து அந்நாட்டு அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குடிமக்கள் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். முடிந்தவரை வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். அண்டை நாடான சீனாவில் உள்ள அதிக காற்று மாசு காரணமாக சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு அவ்வப்போது மஞ்சள் பூசு காற்றில் பறந்துவரும். இது சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும். ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நிலையில் இந்த மஞ்சள் துகள்கள் வயோதிகர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என வடகொரிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

வடகொரியாவில் கொரோனாவால் எத்தனை பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என இதுவரை வெளி உலகுக்குத் தெரியாது. பலி எண்ணிக்கையும் தெரியாது. இந்நிலையில் வடகொரிய அரசு ஊரடங்கு சமூக விலகல் ஆகியவற்றை சரியாகப் பின்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் எல்லைப் பாதுகாப்பை அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென்கொரியா, சீனா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகள் வட கொரியாவில் என்ன நடக்கிறது என நோட்டமிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x