கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி??

நடிகர் ரஜினிகாந்த் தான் ஜனவரியில் கட்டாயம் கட்சி ஆரம்பிப்பேன். இதுதொடர்பான அறிவிப்பை இம்மாதம் 31ஆம் தேதி வெளியிடுவதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து இவர் சமிபத்தில் ஐதராபாத்தில் அண்ணாத்த படபிடிப்பில் கலந்துகொண்டு பணியாற்றி வந்தார். படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா இல்லை என்றாலும் இரத்தக்கொதிப்பு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.
இந்நிலையில் தான் கட்சி தொடங்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் எனக்கு இதுமாதிரியான ரத்தக் கொதிப்பு ஏற்படக்கூடாது. இப்படி ஏற்படும் போது எனது மாற்று சிருநீரகத்தை கடுமையாகப் பாதிக்கும். நான் இப்போது கட்சி ஆரம்பித்தால் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு 3 நாள் மருத்துவமனையில் இருந்தேன்.
நான் இப்போது இதனையும் மீறி கட்சி ஆரம்பித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டால் என்னை நம்பி வந்த பலருக்கும் இதனால் சிக்கல் ஏற்படும். கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். அதற்காக என்னை நம்பி கட்சியில் இணைவோரை பலிகடா ஆக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.