சென்னையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.984 குறைவு!

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக சற்று குறைந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொருளாதாரமே நிலை குலைந்து இருக்கும் சூழ்நிலையிலும் தங்கம் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 1ம் தேதி தங்கம் ஒரு சவரன் 41,568க்கும், 3ம் தேதி 41,592, 4ம் தேதி 41,616, 5ம் தேதி 42,592க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக 18வது நாளாக கடந்த 7-ம் தேதி ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5420க்கும், சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு சவரன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம். இந்நிலையில், இன்று வர்த்தக முடிவில் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.984 குறைந்து ஒரு சவரன் ரூ.41,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு 123 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5,242-க்கு ம் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை 3வது நாளாக குறைந்து வருவது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது. நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60 காசு குறைந்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.82,800 ஆக உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x