“என் தந்தை உடல்நிலை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்!!” பிரணாப் முகர்ஜி மகள் வேண்டுகோள்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப்புக்கு மூளையில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு முன்பே அவர்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் செயற்கை சுவாசம் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதற்கிடையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்துவிட்டதாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவல் வருகிறது. அது உண்மையில்லை என்று அவரது மகள் சர்மிஷ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “என் தந்தையை பற்றி வரும் தகவல்கள் வெறும் வதந்தியே! செய்திநிருவனங்களிடம் தயவுசெய்து தொந்தரவு செய்ய வேண்டாமென கேட்டுகொள்கிறேன். மருத்துவமனையில் இருந்து தகவல் எப்போது வந்தாலும் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.