4 ஆண்டுகளில் ரூ.8,600 கோடி இழப்பீடு – விவசாயிகளுக்கு வழங்கியுள்ள காப்பீடு நிறுவனங்கள்!

தமிழகத்தில் விவசாயிகள் நஷ்டத்தில் சிக்குவதை தவிர்க்க பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பயிர் இழப்பீட்டுக்கு 8,614 கோடி ரூபாயை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

பருவமழை பாதிப்பு, இயற்கை சீற்றம், வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்றவற்றால் விவசாய தொழில் லாபத்திற்கும், நஷ்டத்திற்கும் இடையே ஊசலாட்டம் போடுகிறது. விவசாயிகள் நஷ்டத்தை குறைக்கவும், தொடர்ந்து வேளாண்மையில் ஈடுபடவும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக, பயிர் இழப்பீட்டுக்கு தகுந்தபடி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, இரண்டு காப்பீட்டு நிறுவனங்களை, மத்திய அரசு நியமித்து உள்ளது.

இந்நிறுவனங்கள் வாயிலாக, இம்மாதம், 10ம் தேதி வரையிலான, நான்கு ஆண்டுகளில்  42.10 லட்சம் விவசாயிகளுக்கு, 8,112 கோடி ரூபாய் பயிர் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x