இந்தியாவில் இன்று அதிகபட்ச பரிசோதனை மற்றும் அதிகபட்ச டிஸ்சார்ஜ்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. அதே போல் ஒரே நாளில் அதிகபட்சமாக 53,879 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,19,364 பரிசோதனைகள் நடந்துள்ளன. தினசரி மேற்கொள்ளப்படும் அதிக பரிசோதனைகளால் அதிக கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இருப்பினும் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை என்ற உத்தியை பயன்படுத்தி விரிவான கண்காணிப்பு, உடனடி தனிமைப்படுத்தல் மற்றும் சிறந்த சிகிச்சை ஆகியவைகளை வழங்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அணுகுமுறையின் பயனாக தற்போது குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 8-ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 53,879 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,80,884 ஆக உயந்துள்ளது. இது சிகிச்சையில் உள்ளவர்கள் (6,28,747) எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இறப்பு விகிதம் 2.01% ஆக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x