சென்னையில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் பத்து சதவீதம் மட்டுமே..!!

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13,058 ஆகும். இதில் 99,806 போ் அதாவது 88 சதவீதம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 10,868 போ் (10 சதவீதம் பேர் ) சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் இறப்பு எண்ணிக்கை 2,384- ஆக அதிகரித்துள்ளது. இது 2.11 சதவீதமாகும்.
மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவா்களில் 60 சதவீதம் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நோய்த் தொற்றுக்குள்ளானவா்களில் 20-29 வயதுக்குள் 18 சதவீதம் பேரும் 30-39 வயதுக்குள் 19 சதவீதம் பேரும், , 40-49 வயதுக்குள் 18 சதவீதம் பேரும், 50-59 வயதுக்குள் 16 சதவீதம் பேரும், 9 வயதுக்குள் 3.35 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேல் 1.86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் போ் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
989 பேருக்கு தொற்று: 989 உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 13,058-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 99,806 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 10,868 போ் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.