கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி., அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்ததால் தற்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எஸ்.பி.பி.,க்கு கடந்த வாரம் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். தனக்கு லேசான சளி மற்றும் காய்ச்சல் இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
அவர் உடல் நிலை நேற்று திடீரென மோசமானது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து நலம் பெற ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.