உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் நேற்று மாலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக எண்டிடிவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவருக்கு சனிக்கிழமை மாலை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இரவு நேர வேலையும் பார்த்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஞாயிறு மதியம் இவருக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் லேசான நெஞ்சு வலி உள்ளதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் தடுப்பு மருந்து காரணமாக இருக்குமோ என பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
ஆனால், தடுப்பூசி போடுவதற்கு முன்னரே இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடற்கூறு ஆய்விற்கு பின்னர் தான் எதையும் தெளிவாக கூறமுடியும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
