கடன் தொல்லை.. தறி தொழிலாளியான கணவன் – மனைவி தற்கொலை!

கடன் தொல்லையால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தறித்தொழிலாளிகளான கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டவிடு, குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவரது மனைவி மேனகா (38). இவர்களுக்கு பூஜா (14), நவீன் (10) ஆகிய குழந்தைகள் உள்ளனர். தனது தொழில் மேம்பாட்டுக்காக சுப்பிரமணி தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன்களை வாங்கியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் வியாபாரமே இல்லாமல் போனதால் குடும்பம் நடத்தவே வருமானமில்லாமல் போயுள்ளது.
இதனிடையே கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள சுப்பிரமணி முடிவு செய்தார்.
அதன்படி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தம்பதி, தாங்களும் அதை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் சுப்பிரமணியனும், மேனகாவும் உயிரிழந்துவிட்டனர். தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது உயிருக்கு ஆபத்தான நிலையில் பூஜாவும், நவீனும் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.