ஜனநாயகத்திற்கு சோதனையான காலக்கட்டம் இது – மோடி அரசை வெளுத்து வாங்கிய சோனியா!
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா வெளியிட்ட சுதந்திர தின செய்திக்குறிப்பில், நாட்டில் எழுதுவதற்கும், பேசுவதற்கு சுதந்திரம் உள்ளதா என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.
சோனியா சனிக்கிழமை வெளியிட்ட தனது சுதந்திர தின உரையில் மத்திய அரசு மீது கடுமையாக தாக்கி விமர்சித்தார். மோடி தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக விரோதமானது என்றும், இது ஜனநாயகத்திற்கு சோதனையான காலம் என்றும் குற்றம் சாட்டினார்.
இன்று எழுதுவதற்கு, பேசுவதற்கும், கேள்வி எழுப்புவதற்கும், கருத்து வேறுபாடு கொண்டிருப்பதற்கும், கருத்துக்களை கொண்டிருப்பதற்கும் நாட்டில் சுதந்திரம் உள்ளதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக, இந்தியாவின் ஜனநாயக சுதந்திரத்தை அப்படியே வைத்திருக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் போராட்டங்களையும் மேற்கொள்கிறோம்.
சீனா, பாகிஸ்தானிற்கு தக்க பதிலடி தரப்பட்டிருப்பதாக மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் 60 நாட்களில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக சோனியா கூறினார்.