ஓய்வு அறிவித்த தருணம்.. நெகிழ்ச்சியில் தோனியும்.. ரெய்னாவும்
இந்திய கிரிகெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று மாலை அறிவித்தனர். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ள நிலையில்,ஓய்வு அறிவித்த நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
அதில் எம்.எஸ். தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம்கட்டித்தழுவுவது போலவும், இருவரையும் மற்ற சக வீரர்கள் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவிப்பது போலவும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Two roads converged on a #yellove wood… #Thala #ChinnaThala #73Forever ??