கொரோனா பரவும் அச்சம் – நோபல் மெகா விருந்து நிகழ்ச்சி ரத்து!

ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கும் விழாவில் நடக்கும் பாரம்பரிய மெகா விருந்து நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்காக, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிச., 10-ம் தேதி விருது வழங்கப்படும்.
நார்வே தலைநகர், ஓஸ்லோ நகரில் அமைதிக்கான பரிசும், ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில், மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அப்போது ஸ்டாக்ஹோம் நகரில் வழக்கமான மெகா விருந்து நிகழ்ச்சி நடக்கும்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டு அரச குடும்பத்தினர் உள்பட உலகம் முழுவதும் 1,300 வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்வர். கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு இந்த விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.