2020 வாழ்க்கையை புரட்டிப் போட்டு பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது – குடியரசுத் தலைவர் சுதந்திர தின உரை!

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள் இங்கே: நாட்டில் கொரொனா நெருக்கடியை சமாளிப்பதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். நாடு அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோயை கையாளவதில், உலக நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியதன் மூலம், இந்தியா நெருக்கடி காலத்திலும் உலகிற்கு துணை நிற்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர விரும்பிய இந்தியர்கள், வந்தே பாரத் மிஷன் மூலம் தாய் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
2020 ஒரு சவாலான ஆண்டாக இருந்து வந்துள்ளது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் நம் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. இதன் மூலம் மனித குலத்திற்கு, இயற்கை பல பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அதை நாம் உணர்ந்து நமது தவறுகளை திருத்திக் கொண்டு, இயற்கையை மதித்து, அதனை பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒவ்வொரு இந்தியரும் கடமைபட்டுள்ளார். நாட்டின் எல்லையை பாதுகாப்பதில், தங்கள் விலை மதிப்பில்லாத உயிரை தியாகம் செய்துள்ளனர்.
ராம் ஜென்ம பூமி பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டு, அனைத்து தரப்பினரும் அதனை உளமாற ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், தாய்மொழி வாயிலாக குழந்தைகள் கற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் சிறந்த முறையில் கற்க இயலும் . இவ்வாறு தனது உரையில் கூறியுள்ளார்.