மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் உயிர் துறந்த கிராமத்து காந்தி தாத்தா!!

உசிலம்பட்டி அருகே காந்தி ஜெயந்தியன்று உயிரிழந்த’ கிராமத்து காந்தி தாத்தா’ என்றழைக்கப்பட்ட தியாகி குருசாமி இறந்ததால் கிராம மக்கள் சோகமடைந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கணூரைச் சேர்ந்த குருசாமி தாத்தா எனும் சுதந்திர போராட்ட வீரர். இவர் நள்ளிரவு 12:30 மணி அளவில் உடல்நலக்குறைவால் தனது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 89, இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். தற்போது வரை கிராமத்தில் காந்தியாகவே வலம் வந்த இந்த கிராமத்து காந்தி தாத்தா கிராமத்து இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்று விதைத்து வந்தார். இவரது மறைவு கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x