தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேஜாஸ்வி மீது ஷூ வீசிய மர்ம நபர்!!

பீஹாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜாஸ்வி மீது மர்ம நபர் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீஹார் சட்டசபை தேர்தல், வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக நடக்கவுள்ளது.
நேற்று அவுரங்காபாத் மாவட்டம் குடும்பா சட்டசபை தொகுதிக்குட்பட்ட பாஹாபந்தி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிராசார கூட்டத்தில் தேஜாஸ்வி யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி வேட்பாளரை ஆதரித்து பேச வந்தார்.
முன்னதாக தேஜாஸ்வி யாதவ் மேடையில் மூத்த தலைவர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ மர்ம நபர் ஷூவை வீசினார். அது தேஜாஸ்வி யாதவின் மடியில் விழுந்தது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.