பிப்ரவரியில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு..! பல்கலை அதிரடி

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இரண்டு மற்றும் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் மே 21 வரை வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு மே 24ஆம் தேதி செய்முறை தேர்வும், ஜூன் 2-ல் செமஸ்டர் தேர்வும் தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.
அதேபோல் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14ம் தேதி முதல் ஏப்ரல்12ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். ஏப்ரல்15ம் தேதி முதல் செய்முறைத் தேர்வும், ஏப்.26ம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.