ஊரடங்கால் வேலை இழந்தவர்கள் 50% சம்பளத்தை திரும்ப பெரும் வாய்ப்பு!!!

கொரோனா ஊரடங்கின் போது வேலை இழந்தவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 30, 2021 வரை, ESIC-ல் (தொழிலாளர்களுக்கான அரசின் காப்பீட்டுக் கழகம்) பதிவுசெய்த ஊழியர்கள், மேம்பட்ட தளர்வு மற்றும் சலுகைகளுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடல் பீமிட் வியாகி கல்யாண் யோஜனா திட்டம் (Atal Beemit Vyakti Kalyan Yojana – ABVKY) நீட்டிக்கப்படுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வேலையின்மை நிவாரண விகிதத்தை 25% வீதத்திலிருந்து 50% ஊதியமாக உயர்த்தவும், டிசம்பர் 31, 2020 வரை தகுதி அளவுகளில் தளர்வு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

அடல் பீமிட் வியாகி கல்யாண் யோஜனாவின் கீழ், ஒரு தொற்றுநோய் காலத்தின் போது வேலை இழந்தவர்கள், வேலையை மீண்டும் தொடங்கியிருந்தாலும், மூன்று மாதங்கள் வரை 50% ஊதியத்தை வேலையின்மை நிவாரணமாகக் கோரலாம். இதற்காக, ESIC 44,000 கோடி ரூபாயை அறிவிக்க உள்ளது. இதற்கு முன்பு, வேலை இழந்த 90 நாட்களுக்குள் நிதி உதவி வழங்கப்பட்டது, இப்போது அது 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
2020 டிசம்பர் 31 க்குப் பிறகு, ஜனவரி 1, 2021 முதல் ஜூன் 30, 2021 வரையிலான காலகட்டத்தில் ABVKY அசல் தகுதி நிலையில் கிடைக்கும்.
- முந்தைய நான்கு பங்களிப்பு காலங்களில், காப்பீட்டு நபரின் வாழ்நாளில் ஒரு முறை அதிகபட்சம் 90 நாட்கள் வேலையின்மை வரை பணம் செலுத்தப்படும்.
- இந்த திட்டம் ஒரு நாளைக்கு சராசரியாக 25% சம்பாதிக்கும் அளவிற்கு நிவாரணம் அளிக்கிறது.
- இத்திட்டத்தைப் பெறுவதற்காக நிவாரணம் கோரப்பட்ட காலகட்டத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபர் வேலையில்லாமல் இருக்க வேண்டும்.
- உரிமைகோரலை ஆன்லைனில் www.esic.in என்ற இணையதள பக்கத்தில் பிரமாணப் பத்திரம், ஆதார் அட்டையின் நகல் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை நியமிக்கப்பட்ட ESIC கிளை அலுவலகத்திற்கு தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்கலாம்.
- உரிமைகோரல்களை தொழிலாளர்கள் நேரடியாக தாக்கல் செய்யலாம்.
- வேலை இழந்த 30 நாட்களுக்குப் பிறகு 90 நாட்களுக்கு முன்னர் உரிமைகோரல் செலுத்தப்படும்.
- காப்பீடு செய்யப்பட்ட நபரின் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு அவரின் தரவுடன் இணைக்கப்பட வேண்டும்.
- காப்பீடு செய்யப்பட்ட நபரை அடையாளம் காண ஆதார் பயன்படுத்தப்படும்.
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட உரிமைகோரலைப் பெற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் காப்பீடு செய்யப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்.