“அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியை நான் பார்க்க விரும்புகிறேன்.. ஆனால் கமலா ஹாரிஸிற்கு அந்த தகுதி இல்லை” – ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்வுள்ளது. இதற்கான அந்நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டும் கொரோனாவுக்கு மத்தியிலும் தீவிர தேர்தல் பிரசாரங்களில்ஈடுபட்டு வருகின்றன. இதில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜனநாயக கட்சியின் முதல் முறையாக துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய மற்றும் ஜமைக்கா வம்சாவளியை சேர்ந்தவரான கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டணியை ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகின்றமை பெரிதும் ஊடகங்கள் வாயிலாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அங்கு நடைபெற்ற குடியரசு கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி நான் பார்க்க விரும்புகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் கமலா ஹாரிஸ் அந்த நிலைக்கு வருவதைப் பார்க்க நான் விரும்பவில்லை, அவருக்கு அத்தகைய திறமைகள் இல்லை எனவும், அதற்கான தகுதி இவாங்காவிடம் இருப்பதாகவும் அவர் ஜனாதிபதியாக வேண்டும் என பலரும் விரும்புவதாக டர்ம்ப் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x