கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்,ரூ.70,000 ஊதியம் வழங்கும் ஆலோசகர் பணிக்கான வாய்ப்பு…விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!!

மத்திய அரசிற்கு உட்பட்ட கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்பிஏ, பி.இ, பிடெக் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆலோசகர்
மொத்த காலிப்பணியிடங்கள் : 09
கல்வித் தகுதி : M.Phil, Ph.D., M.Sc பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
ஊதியம் : ரூ.70,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.edcilindia.co என்ற இணையதளம் மூலம் 23.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், www.edcilindia.co.in – இந்த இணைப்புக்குள் செல்லவும்.