ம.பி., ஆளுநராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம்

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச ஆளுநராக இருந்த லால்ஜி டாண்டன் உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் காலமானார் . இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் புதிய ஆளுநராக லட்சுமிகாந்த் பாஜ்பாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

69 வயதான லட்சுமிகாந்த் பாஜ்பாய் உத்தர பிரதேச மாநிலம் மீரட் சட்டசபை தொகுதியிலிருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x