அசுத்தமாக இருந்த மருத்துவமனை கழிப்பறை.. சுத்தப்படுத்திய சுகாதார அமைச்சர்

புதுவை இந்திரா காந்தி மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டின் கழிப்பறை அசுத்தமாக இருப்பதை கண்ட சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதனை சுத்தப்படுத்தினார்
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு உள்ளது. இங்குள்ள சுகாதார வசதிகளை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கழிப்பறை அசுத்தமாக இருப்பதை கண்ட அமைச்சர், ஏன் என்று வினவினார். அதற்கு ஊழியர்கள், நன்றாக தான் கழுவுகிறோம் கறை விடவில்லை என்றனர். இதைக்கேட்டது துடைப்பத்தை எடுத்து தானே கழுவினார். இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கழுவி முடித்துவிட்டு ‘இப்படி கழுவினால் எப்படி கறை எப்படி இருக்கும்’ என கேட்டுவிட்டு சென்றார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.